திங்கள், 20 அக்டோபர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 4


என்னடா இவன் அதிசயம்னு சொல்லுறான் நம்ம பாக்காத அதிசியமானு நினைக்காதிங்க.
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டு ஆட்டோகளில் மட்டும் போய் இருந்தா நான் பார்த்தத நீங்க கூட ஆ--னுதான் பார்பிங்க. நாங்க (ரவியும் நானும்) 2 பேரும் taxi ல ஏறி உட்காந்ததும் taxi டிரைவர் அவருக்கு இடது பக்கம் கைய வெளிய விட்டு மீட்டர் போட்டாரு பாருங்க அந்த மாதிரி நிகழ்ச்சி இதுவரைக்கும் நான் சென்னைல எந்த ஆட்டோவிலும் பார்த்தது இல்ல. டாக்ஸி அப்படியே Dadar நகர் உள்ள 20 கிமீ வேகத்துல போச்சு. டாக்ஸி ஜன்னல் வழியா வெளியே (பட்டிகாட்டான் மீட்டாய் கடைய பார்த்த மாதிரி) பாத்துக்கிட்டே வந்தேன். வழி முழுவதும் பழைய காலத்து கட்டடங்கள் புது கட்டடங்கள் சேர்ந்து சேர்ந்து இருந்தன. ரவியும் எனக்கு புரியாத ஹிந்தி-ல டாக்ஸி டிரைவர்- ட எதோ சொல்லிடே வந்தான். 

 ஒருவழியா ஒரு அப்பார்ட்மென்ட்-ல வாசல போய் நின்னுச்சு. வாசல இறங்குனதும் ரவி வேகமாக பர்ஸ எடுத்து மீட்டர் பார்த்துட்டு அதவிட 1 ரூபாய் கம்மியா கொடுத்தான். நம்ம ஊரு சினிமால சார் மீட்டருக்கு மேல 2 ரூபாய் போட்டுத்தாங்க- னு டயலாக் ( சினிமால மட்டும் ) கேட்டுருகோம். இதல்லாம் பாக்க இந்த ஊரு டாக்ஸி டிரைவர் ரெம்ப நல்லவன்கய- னு நினைச்சுகிட்டேன். 
7 பேரு நிக்க மட்டும் முடியுற லிப்ட்ல 3 வது மாடிக்கு கூட்டிட்டு போனான். அந்த மாடில 2 வீட்டு வாசல் இருந்துச்சு. அதுல இடப்பக்கம் உள்ள வீட்டுக்கு கதவ திறந்து உள்ள போனோம். ஹால்-அ என் பெட்டி பேக் எல்லாம் வச்சிட்டு சோபா உக்காந்தோம். ரவி அண்ணன் உள் ரூம்-ல துங்கிட்டு இருந்தாரு. நாங்க அப்டியே ஸ்கூல் பிரண்ட்ஸ் பத்தி பேசிட்டு இருந்தோம். மணி இப்டியே 6 ஆகிருச்சு. ரவி சொன்னான் வாட போய் டீ குடிச்சுட்டு வரலாம்னு சொன்னான். சரின்னு 2 பேரும் பல்ல வெலக்கி மூஞ்ச கழுவிட்டு டீ குடிக்க போனோம். ஒரு சின்ன ஹோட்டல் ஓரளவு நல்ல நீட்டா இருந்துச்சு வெளியவே டேபிள் எல்லாம் போட்டுருந்தாங்க. அதுல உட்கந்தோம். ஒருத்தன் கைல 2 டம்ளரில் தண்ணி கொண்டு வந்து வச்சான் . ஹிந்தில அவன் என்ன பார்த்து கியா சையே னு(என்ன வேணும்) கேட்டான். அப்ப அவன் என்ன கேட்டனு ஒனும் தெரியல. நான் அப்டியே முழிச்சு ரவிய பார்த்தேன். அவன் உடனே 2 கட்டிங்னு சொன்னான்.

எனக்கு தூக்கி வாரி போட்டது என்னடா சொல்லுற !!! (நம்ம ஊர்ல கட்டிங்னா சரக்கு ஆன இங்க டீ னு அர்த்தம்) அவன் உடனே நான் ஆச்சிரியம் படுறத பார்த்து நான் என்ன நினைக்குறேனு புரிஞ்சு டேய் இந்த ஊர்ல டீ தான் அப்டி 
சொல்லுவங்கனு சொன்னான். நான் லேசா சிரிச்சுகிட்டேன் இந்த ஊர்ல இன்னும் இந்த மாதிரி இனி என்ன என்ன வார்த்தை இருக்குமோனு. கொஞ்ச நேரத்துல டீ வந்துச்சு எதோ நம்ம ஊரு டீ மாறி இல்லனாலும் அந்த காலை நேரத்துக்கு நல்லாதான் இருந்துச்சு. பெறகு 2 பேரும் அவன் வீட்டுக்கு போனோம். அங்க அவனின் அண்ணன் எழுந்து பேப்பர் படிச்சுட்டு இருந்தாரு. அவரும் எனக்கு முன்பே தெரியும் என்பதால் அவர்ட நலம் விசாரிச்சுட்டு டிவிய பார்த்துகிட்டே இருந்தேன். 7 மணி போல வீட்டுக்கு போன் பண்ணி வந்து சேர்ந்துடேனு சொல்லிட்டு. குளிச்சு ரெடி ஆனேன். ரவியும் குளிச்சு ரெடி ஆனான். 

நான் ஹால்ல உக்காந்து டிவி பார்த்துட்டு இருந்தேன் ரவி உள் ரூம்ல தல வாரிக்கிட்டு இருந்தான். யரோ ஒருத்தர் கதவ தட்டுற சத்தம் கேட்டு ரவி கூப்பிடுகிட்டே கதவ திறந்தேன். என் வயசுல ஒரு பையன் ஹிந்தி-ல ரவி பேரசொல்லி என்னமோ கேட்டான். அதுக்குள்ள ரவி வந்துடான் நல்ல வேலை. நான் தப்பித்தேன். அவன் என்னமோ ஹிந்தி ரவிட்ட சொல்லிடு போய்ட்டான். பெறகு 2 பேரும் கீழ அந்த ஹோட்டல் போய் தோசை சாப்பிட்டு வந்தோம். நல்ல வேலை அவன் இருந்ததால் அவனே எல்லா இடத்துலும் பேசிட்டான். திரும்ப விஜய் அண்ணனுக்கு போன் போட்டு அட்ரஸ் வாங்கிட்டு ரவியே என்னை அங்க கொண்டுவந்து விட்டுருவனு சொல்லிட்டு. ரவி அண்ணன் கிட்ட போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு பெட்டி பேக்-அ எடுத்துகிட்டு மீண்டும் dadar ஸ்டேஷன்கு போறதுக்கு டாக்ஸி பிடிச்சோம். ( அந்த ஸ்டேஷன்-ல லோக்கல் ட்ரைன் ஏறி கோரேகான் என்ற இடத்துக்கு போகணும்) .ரவிக்கும் இதுதான் முதல் தடவை அந்த ஏரியாக்கு போறது.       

பயணம் இன்னும் தொடரும்..... 

வெள்ளி, 17 அக்டோபர், 2008

Talattu pada (malaysian local tamil ) music video

பாட்டு கேட்க நல்லா இருக்குது.video clip done for one of the best malaysian tamil song. Directed by Shanjey & JK.Wicky,camera man Ganeson.Location Genting & KL.Song composed by Jay( music director of Uyirai tholaithen) singer sidharthan

வியாழன், 16 அக்டோபர், 2008

நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, படையப்பா - ஒற்றுமைகள்.

           

நல்லவனுக்கு நல்லவன் , அண்ணாமலை , படையப்பா இந்த மூன்று படங்களின் திரைகதை ஒற்றுமைகள்.

இந்த மூன்று படங்களிலும் ரஜினி முதலில் சாதரண மனிதராக இருப்பார்.ரஜினியின் சொந்தம் அல்லது நண்பர் தப்பு செய்வார்கள் அதை ரஜினி கண்டிபார். 

பின்னர் அவர்கள் எதிரியுடன் இணைந்து ரஜினியை பழி வாங்குவார்கள் அதனால் பாதிக்கப்படுவார் பின்னர் கடுமையாக உழைத்து மிக பெரிய பணக்காராக ஆவர். அதே நேரத்தில் காதல் செய்து கல்யாணம் பண்ணி பெண் குழந்தை பிறந்திருக்கும்.

 அதை பாசமுடன் வளர்த்திருபார். ஆனால் ரஜினி மகள் எதிரியின் மகனை காதல் செய்வாள். ரஜினி அதை கண்டிபார்.  அதனால் ரஜினி மகள் ரஜினியே கேவல படுத்துவாள். அதே நேரத்தில் எதிரியால் சொந்தம் அல்லது நண்பர் பாதிகபடுவார்.

 அதனால் ரஜினி எதிரியுடன் சண்டை போட்டு காப்பாத்துவார். கடைசில் எல்லோரும் ஒன்று சேர்வார்கள். 

மூன்றிலும் ரஜினி இளமை, முதுமை, ஆகிய வேடங்களில் அருமையாக நடித்துருப்பார். இளமை வயதில் வேகமான ரஜினியாகவும் ,முதுமை வயதில் பொறுப்பான அப்பாவாக வலம்வருவார்.    

இப்படிஇருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!
 
11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..! 
 
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க.. 

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.

இது என் நண்பன் மூலம் மெயிலில் வந்தது.

செவ்வாய், 14 அக்டோபர், 2008

மேதை.........

திங்கள், 13 அக்டோபர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 3

முந்தின பதிப்பு இங்க (தமிழ் to ஹிந்தி பாகம் - 2)


என்னடா இவன் ரெம்ப பயந்தவனா இருக்கான்னு நெனைக்க வேண்டாம். எல்லோருக்கும் முதல் தடவை புது உலகத்துக்கு போகும் பொது இருக்குறதுதான்.

அந்த பயத்தோட மொபைல் உள்ள ஒரு ஒரு நம்பரா பார்த்துட்டு இருந்தேன். அப்பதான் நாபகம் வந்துச்சு என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஒருவன் மும்பையில் வேலை பாக்குறேன்னு சொன்னது. ஆனா அவன் நம்பர் என்ட இல்ல. அதனால என்கூட பள்ளியில படிச்ச பிரண்சுக்கு போன் போட்டு எப்டியோ நம்பர் வாங்கி அவனுக்கு கால் பண்ணேன். நான் முன்ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் அவன் நான் இறங்க வேண்டிய DADAR லதான் தங்கி இருகேன்னு சொன்னான். அவன்ட நடந்தது , நடக்குறது, நடக்கபோவது எல்லாம் சொல்லி வண்டி பெட்டி நம்பர் சொல்லி 4 மணிக்கு ஸ்டேஷன் வர சொல்லிடு கால கட் பண்ணிட்டு யப்பாடினு உட்கார்ந்தேன்.


மொபைல்ல காலை 2:30   அலாரம் வச்சிட்டு படுத்து துங்க ஆரம்பிச்சேன். 2 மணிக்கு நான் எந்துருச்சு அலாரத்த எழுப்பி அமத்திட்டு ஜன்னல பார்த்துடே இருந்தேன். திடிர்னு ட்ரைன் குகை குள்ள எல்லாம் போய்ட்டு இருந்தது. இருட்டா இருந்ததால சரியா தெரியல. லேசா குளுரவும் செஞ்சது. மனசுல லேசா சந்தோசமா வேற இருந்துச்சு. B.E முடிச்சபோ நம்மக்கு Rs3000 சம்பளத்துல சாப்ட்வேர்ல வேலை கிடைக்குமானு இருந்த என்னக்கு Rs10000 ல Offer.  சந்தோசம் இருக்கத்தான செய்யும். அப்டியே சென்னைல வேலை தேடி கம்பெனி கம்பெனியா interview அட்டென்ட் பண்ணது. மொபைல் சிம் கார்டு விக்க வேலை கிடைச்சதும் , அதுக்கு சந்தோஷ பட்டது, அத எங்க அண்ணன்ட சொல்லி திட்டு வாங்குனது. பணம் கட்ட சொல்லி ஒருத்தன் வேலதரனு சொன்னது நெனச்சி நானே சிரிச்சுகிட்டேன் நம்மக்கும் லைப் செட் ஆகபோதுனு சந்தோசத்துல.  

மும்பை ஸ்டார்ட் ஆக பெட்டி பேக் எல்லாம் எடுத்து வச்சி வாசல்ல வந்து ரவிக்கு (அதாங்க ஸ்கூல் நண்பன்) போன் போட்டேன் அவனும் ஸ்டேஷன் வந்துட்டேனு சொன்னான். என்னைய அறியாம வாய்ல சின்ன சிரிப்பு.  
Dadar ஸ்டேஷனும் வந்துருச்சு. அவனும் கரெக்ட்டா என் கோச் நேரா வந்து நின்னான். ரெம்ப நாள் கழிச்சு பார்த்த சந்தோசத்துல என்னடா மச்சான் எப்டி இருக்குறனு நலம் விசாரிச்சுட்டு இருந்தேன். திடிர்னு யரோ காது பக்கத்துல என்னமோ கத்தி 
பெட்டில கைய வச்சி இழுத்த மாதிரி இருந்துச்சு திரும்புனா சிகப்பு சட்டைல பெட்டி தூக்குரவரு யம்மாடி பயந்த மாதிரியே வந்துடங்கய ( அந்த ஊர்லயும் அதே சிகப்பு சட்டை) நல்ல வேல ரவிக்கு ஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சுருந்தது. என்னமோ சொன்னான்.  அதுக்கு அவரு எதோ சொல்லிட்டு போய்ட்டாரு. அப்டியே மெதுவ நடந்தோம் அவன் வீட்ட பத்தி நான் விசாரிக்க பதிலுக்கு அவன் விசாரிக்க ஸ்டேஷன் வாசல பார்த்து. காலை 4 மணி போலவே இல்ல அவ்ளோ 
கூட்டம் அந்த ஸ்டேஷன் . நான் அவன்ட கேட்டேன் என்னடா இவ்ளோ கூட்டம்னு அதுக்கு அவன் சொன்னான் இதுஎன்ன மச்சி கூட்டம் காலையில 8 மணிக்கு இருக்கும் பாரு கூட்டம் அதுக்கு பேர்தான் கூட்டம்னு சொன்னான்.
அப்டியே dadar வாசல்ல வந்து நின்னோம். அந்த நேரத்துக்கு அத்தன taxi அங்க நின்னுச்சு. அதுல ஒன்னுல எதோ இடத்து பேர சொல்லி கேட்டான் அப்புறம் வண்டில ஏறி உட்கந்தோம்  அப்பதான் அங்க நான் இதுவரைக்கும் பாக்காத ஒரு அதிசயம் நடந்தது!!!!!!!     தொடரும்..................... 


புதன், 1 அக்டோபர், 2008

இரவு உலகம் ------ (சென்னை)

Rio De Jeniro 

Paris 


Niagara Falls 


London 


Singapore


Chennai 


மன்னிச்சுருங்க சென்னைல போட்டோ எடுக்கும் போது கரண்ட் போயிருச்சு
Blog Widget by LinkWithin