திங்கள், 24 நவம்பர், 2008

நான் பார்த்த வாரணம் ஆயிரம்நீங்க இத எல்லாம் கவனிச்சிங்களா????
ஒருவழியா வாரணம் ஆயிரம் படத்த பார்த்துட்டேன். படம் சும்மா சொல்ல கூடாதுங்க அவ்ளோ ரசிச்சி பண்ணிருக்காங்க சூர்யாவும் கவுதமும். அப்பா மகன் தொடர்பான சீன் ஆகட்டும், காதலன் காதலி சீன் ஆகட்டும் நல்லா யோசிச்சி எடுத்துருகாங்க. சூர்யா தான் அடுத்த கமல்னு கூட சொல்லலாம்.

அப்பா சூர்யா மகன் சூர்யாட காலேஜ்ல சேர்த்துட்டு கஷ்டப்பட்டு பீஸ் கட்டுனத நெனச்சி வருத்த படாதனு சொல்லுரப்பமும். மகன் சூர்யா வீட்டுலவச்சி கித்தார் வாசிக்குற கேட்டு சிம்ரனும் அப்பா சூர்யா ஆடிட்டு உக்கரும்போது சிம்ரனுக்கு 
 கால்வலிக்கும்னு அமுக்கி விடுவதும். அப்பா சூர்யாவின் அஸ்தி கறைத்துவிட்டு திரும்பும்போது அம்மாவுக்கு செருப்பு மாட்ட செருப்பை சரியாக எடுத்துவைபதிலும்,சூர்யா சிறுவனாக இருக்கும்போது தங்கையீன் பிஞ்சு காலை தொட செய்வதும், போதைக்கு அடிமை ஆகி அதை விடமுடியாமல் தவிப்பதும். அமெரிக்காவில் மேக்னாவை தேடி அலையும் போதும் டைரக்டர் மற்றும் கேமரா ஒளிப்பதிவின் நுணுக்கமான வேலைகள் தெரிகிறது.

அப்பா சூர்யாவாக முதிர்ச்சியான நடிப்பும், மகன் சூர்யாவாக நடிப்பில் உள்ள முதிர்ச்சியும் அவரை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். இதை பார்த்த பிறகாவது மற்ற நடிகர்களுக்கு கொஞ்சமாவது நடிக்கவும் செய்யனும்னு தோணும்.

கவுதம் தவறு:  
சூர்யாவின் தங்கைக்கு கடைசிவரை கல்யாணம் பண்ணாமல் இருப்பது சூர்யா படிப்பு முடித்து 7 வருடம் கழித்துதான் திருமணம் செய்கின்றார். அதுவும் தங்கைவுடன் படித்த பெண்ணை, கடைசில் அவளுக்கும் 5 வயது குழந்தை இருக்கிறது. ஆனால் அப்பவும் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை ஒருவேளை அப்பா மகன் கதை என்பதால் விட்டுவிட்டார் போல.... சில நேரங்களில் ஆடைகள் மலையாள வாசனை வீசுவது(அப்பா சூர்யாவின் மரணத்தின்போதும் , திருமணதின்போதும் அது நன்றாகவே தெரிகிறது). காதலி இறந்த போது வெளிபடுத்திய அழுகை கூட அப்பா இறந்ததுற்கு வெளிபடுத்தவில்லை. சில இடங்களில் ஆங்கிலம் தவிர்த்து இருக்கலாம். 

என்னதான் இருந்தாலும் படத்த இன்னொரு தடவ பாத்திறனும். இங்க மும்பைல 1 வீக்தான் ஓடும்போல......

என்னோட ரேடிங் 5 க்கு 4 என்று சொல்லலாம்.

உங்களோட பார்வைல படம் எப்படின்னு சொல்லுங்க........  

2 கருத்துகள்:

அதிரை ஜமால் சொன்னது…

நீங்க சொல்லிய விதத்திலேயே படம் பார்க்கனும் போல இருக்கு.

ரொம்ப நல்லா இருக்கு உங்க விமர்சனம் சதிஷ்.

please remove word verification.

Nilofer Anbarasu சொன்னது…

//அப்பா சூர்யாவாக முதிர்ச்சியான நடிப்பும், மகன் சூர்யாவாக நடிப்பில் உள்ள முதிர்ச்சியும் அவரை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். இதை பார்த்த பிறகாவது மற்ற நடிகர்களுக்கு கொஞ்சமாவது நடிக்கவும் செய்யனும்னு தோணும்.//

ரொம்ப சரி..... இத பார்த்து கண்டிப்பா விஜய் கொஞ்சம் தன் நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சிக்கணும். இப்போ வெளியாகி இருக்குற வில்லு படத்தின் ஓபனிங் காட்சிய பார்த்த, விஜய் பழைய பார்முலாவை இன்னும் விடவில்லை என்று தெரிகிறது.

Blog Widget by LinkWithin