வெள்ளி, 20 மார்ச், 2009

இந்த போட்டோ-வ பாருங்க....!

இந்த படம் பார்த்தும் உங்க மனசுல நெறைய விதமான கருத்துகள் தோணும்.   உங்களுக்கு தோணுறத சொல்லுங்க .......!

செவ்வாய், 10 மார்ச், 2009

உதவிகரம்

நான் மும்பையில் தங்கி பணி செய்து வருகிறேன். தினமும் ஆபீஸ்க்கு பஸ்ல தான் போயிட்டு வருகிறேன். தினமும் நான் காணும் கட்சிகள் மனிதனுக்கு மனிதன் உதவுவது மிகவும் குறைந்து விட்டது என்று தான் தோன்றுகிறது. நான் பஸ்சில் பஸ் ஆரம்பிக்கும் பஸ் ஸ்டாண்டில் ஏறுவதால் என்னக்கு உட்கார சீட் கிடைச்சுரும் . அடுத்த ஒன்னு ரெண்டு ஸ்டாப்லையே பஸ் புல் ஆகிரும். அத்து வர ஸ்டாப்லதான் நெறைய கூட்டம் இருக்கும். பஸ்ல அடிச்சு பிடிச்சு ஏறுவதருக்கு ஆட்கள் ஓடிவருவாங்க ஆனா பஸ் டிரைவர் பஸ் நிப்பாட்டாம லைட்டா ஸ்லொவ் பண்ணிட்டு எடுதுருவாறு அதுல அடிச்சி பிடிச்சி ஏற பார்பாங்க ஆன அதுல யாராவது கீழ விழுந்தா கூட அவர தூக்க யாருமே வரமாட்டங்க. ஆன அவர மிதிச்சு இல்ல அவரா தாண்டி குதிச்சு பஸ்ல தான் ஏற பார்பாங்க. அவர சுதாரிச்சு எழுந்தாதான் உண்டு. பஸ் டிரைவரும் கண்டுக்க மாட்டாரு....

அதுபோல ஒருநாள் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்போ ஆபோசிட் ரோட்ல ஒரு பொண்ணு ரோட்ட கிராஸ் பண்ணிட்டு இருதுச்சு ஒரு சின்ன குழந்தை ரோட்டுக்கு வந்துருச்சு , அந்த குழந்தை நாடு ரோட்டல நின்னுருச்சு அதே சமயம் ஒரு பஸ்சும் வருது ஆனா அந்த பொண்ணு அந்த குழந்தைய பார்த்துடு பேசாம போயிருச்சு நல்ல வேலை பஸ் டிரைவர் ஸ்லொவ் பண்ணிட்டாரு. அப்புறம் அந்த குழந்தை நடந்து ரோட்க்கு சைட்ல போயிருச்சு. பஸ் டிரைவர் ஸ்லொவ் பண்ணலேய்னா என்ன ஆகும்.....
இது மாதிரி நிறைய சம்பவங்கள்.. இங்க ஒருநாளு ஒரு friend வீட்டுக்கு போயிருந்தேன் காலைல போனேன் சாயங்காலம் தான் வந்தேன், அங்க இருந்தபோ நெறைய தடவ வீட்ட விட்டு வெளிய வந்தோம். ஒரு சத்தம் கூட இல்ல. ஆனா சாயங்காலம் கிளம்பும்போது தான் தெரியும் பக்கத்துக்கு வீட்டுல யாரோ காலைலேயே இறந்துடாங்கனு....

முந்தி எல்லாம் வீடுகள் தனித்தனியா இருந்தாலும் அடுத்த வீட்டுல யார் இருக்குறாங்கனு தெரியும் ஆனா இப்போ ஒரே அபார்ட்மென்ட்ல இருந்தாலும் ஒரே மாடில இருந்தாலும் எதுத்த வீடா இருந்தாலும் யார் இருக்குறங்கனு தெரியாது... பிறகு எப்படி அடுத்தவனுக்கு உதவி செய்ய தோணும்.

ஆனா இந்த மாதிரி ஆளுட்ட கேட்டா என் வேலைய பாக்கவே டைம் இல்ல இதுல எப்படினு கேப்பாங்க. ஆனா அவனுக்கும் நாளைக்கு இதே கதைதான் என்பத மறந்துருவாங்க......

இத படிக்கிற உங்களுக்கும் நான் ஒன்னு சொல்ல விரும்புறேன். சும்மா இத படிச்சுட்டு என்டயே நீங்க எப்டின்னு கேள்வி கேட்காம நாலு பேருக்கு உதவுங்கள். நானும் கண்டிப்பா உதவி செய்வேன்....

Blog Widget by LinkWithin