புதன், 30 டிசம்பர், 2009

எந்திரன் புதிய புகைப்படம்- (Enthiran new stills)

தில்லு முல்லு படத்திருக்கு பிறகு ரஜினிகாந்த்-இன் மீசை இல்லாத தோற்றம்
(மற்ற படங்களில் நடித்து இருந்தாலும் மனதில் நிற்கவில்லை)





திங்கள், 28 டிசம்பர், 2009

ஒரு ஊருல ஒரு கிளி



ஒரு ஊருல ஒரு கிளி இருந்தது அது ஒருநாள் நேஷனல் ஹய்வே வழியா வேகமாக பறந்து போயிட்டு இருந்தது அப்ப அந்த வழியாக (அதாவது கிளிபறக்குறதுக்கு எதிர் திசையில்) ஒரு டெம்போ வண்டி பயங்கர வேகத்தில் வந்தது அதை ஒரு 50 வயது மதிக்க தக்க ஒரு மனிதர் ஓடிட்டு வந்தாரு, திடிருனு அந்த வண்டிக்கு டயர் பஞ்சர் ஆகிருச்சு அதனால வண்டி லேசா நிலை குலைந்து ஓட ஆரம்பித்தது அப்ப அந்த வண்டின் கண்ணாடியில் அந்த கிளி மோதி ரோடின் ஓரத்தில் விழுந்தது மயங்கியது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் அந்த கிளி பார்த்து பரிதாப பட்டு அந்த கிளியை மருத்துவமனைக்கு எடுத்து சென்று டாக்டர்ரிடம் காட்டினர்.

டாக்டர் அதனை செக் செய்து பார்த்ததில் அதன் இரு இறக்கைகளும் அடிபட்டு இரத்தம் வடிந்தது. அதனை மருத்துவர் துடைத்து வெள்ளை துணியால் மருந்து வைத்து கட்டினார். பின்பு அதை ஒரு கூண்டில் போட்டு அடைத்து வைத்தார். சிறிது நேரத்தில் அந்த கிளிக்கு மயக்கம் தெளிந்தது. அந்த கிளி அப்பதான் உணர்ந்தது.

என்னனு ?
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
அந்த கிளி நினைச்சது நம்ம பறந்து வந்து மோதினதுல அந்த டெம்போ டிரைவர் இறந்து போய்ட்டார் அதான் நம்மக்கு வெள்ளை சட்டை போட்டு ஜெயில்லில் அடைச்சு வைசுருக்கங்கனு...
(நல்லவேளை தூக்குல போடல)

திங்கள், 21 டிசம்பர், 2009

"குய்க் கன் முருகன் " Vs "வேட்டைக்காரன்" - "Quick Gun Murugan" Vs "Vettaikaran"

நான் பட விமர்சனம் பண்ண விரும்பல , ஏற்கனவே நிறைய விமர்சனம் படிச்சு கலைச்சு போன உங்கள நான் துன்புறுத்த விரும்பல பட் நான் படம் பாக்க போனபோது ஏற்பட்ட சின்ன நகைசுவைய உங்கட்ட சொல்லணும் போல இருந்தது, அதான் இந்த பதிவு...

நான் நேற்று மும்பையில் உள்ள PVR தியேட்டர்ல் வேட்டைக்காரன் படம் பார்க்க போனேன். டிக்கெட் கவுன்ட்டர் பக்கதுல விஜய் ஸ்டில் குதிரையில் அமர்தந்து போல் (கீழே பார்க்கவும்) வைத்துஇருந்தார்கள்.

நான் டிக்கெட் வாங்கிவிட்டு திரும்பி பார்க்கும் போது எனஅருகில் நின்றவர் எனிடம் ஒரு கேள்வி கேட்டார் (ஹிந்தில ) இந்த படம் "குய்க் கன் முருகன் " பார்ட் 2 வானு எனக்கும் என் நண்பருக்கும் வந்தது பாருங்க அப்டி ஒரு அடக்கமுடியாத சிரிப்பு....
ஏன் என்றால் அதே இடத்தில சில மாதங்களுக்கு முன்பு "குய்க் கன் முருகன் " பட போஸ்டர் இருந்தது
நாங்க அவர்ட என்ன சொல்ல , Yes நு சொல்லிடு அந்த இடத்த விட்டு நகர்தோம்.
தியேட்டர்ல் அந்த காட்சி வந்ததும் எங்களுக்கு "குய்க் கன் முருகன் " நெனைப்பு தான் வந்தது

இத பத்தி நீங்க என்ன சொல்லுரிங்க ................

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

மஹதீரா ராம்ஷரன் நடிக்கும் ஆரஞ்சு (மும்பையில் ஷூட்டிங் - புகைப்படம்)

ராம் சரண் தெலுங்கு சூப்பர்(மெகா) ஸ்டார் சிரஞ்சிவி மகன் நடிக்கும் ஆரஞ்சு பட ஷூட்டிங் மும்பையில் உள்ள நரிமன் பாயிண்ட் பகுதியில் நடைபெற்றது , படத்தை இயக்குபவர் பொமரிழு இயக்குனர் பாஸ்கர். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.

நான் தற்செயலாக கடந்த வர சனிகிழமை நரிமன் பாயிண்ட் சென்று இருந்தேன் அப்பொழுது அங்கு எதோ ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தது கூட்டம் ஒன்றும் அதிகமாக இல்லை சிலபேர் தமிழில் பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் விசாரித்தபோதுதான் எனக்கு மேல சொன்ன விவரங்கள் தெரியவந்தன....

புகைப்படங்கள் இதோ ...





படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் ..........

கடைசில் நாங்க இயக்குனர் பாஸ்கரிடம் சென்று எங்களை அறிமுகபடிதிகொண்டோம். அவருக்கு மிக சந்தோசம் , அவர் எங்களிடம் முதலில் கேட்ட கேள்வி என்னைய உங்களுக்கு தெரியுமா என்றுதான், நாங்களும் தெரியும் புக்-இல் படிச்சிருகுறோம் என்று சொன்னது அவர்க்கு மிக மகிழ்ச்சி .... பிறகு அவருடன் நாங்க எடுத்துக்கொண்ட போட்டோ இதோ .....

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஐடியா சிகாமணிகள் ....

நம்ம ஊர்ல கொஞ்சபேற பார்த்திருப்போம் எதாச்சும் புதுசா பண்ணுறேன் சொல்லிட்டு கோணங்கி தனமா எதாச்சும் செஞ்சி வைப்பங்க.

ஆனா நம்ம இப்ப பாக்க போறது வெளிநாட்டுல என்ன கோணங்கி பண்ணிவச்ருகங்கனு,

இதுக்கு நம்ம ஊருகரங்க பரவா இல்ல













Blog Widget by LinkWithin