தமிழ் to ஹிந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் to ஹிந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 நவம்பர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 5




டாக்ஸி அப்டியே மும்பை நகரின் dadar தெருகளில் ஊர்ந்து போய்கிட்டு இருந்தது. சாலைகளில் சிவப்பு நிற பஸ் கருப்பு நிற டாக்ஸிகளும் தான் போயிட்டு இருந்துச்சு. நம்ம சென்னைல எவ்ளோ டூவீலர் ஓடுமோ அவ்ளோ கார்கள் தான் ரோட்ல போயிடு இருந்துச்சு. டூவீலர் எண்ணிக்கை மிக குறைவு. அப்போது அங்க ஒரு ஆட்டோ கூட பாக்கமுடியல. நாங்க ஏறின டாக்ஸி dadar ஸ்டேஷன் போய்நின்னுசு. ரவி சொன்ன மாதிரியே அந்த ஸ்டேஷன் அவ்ளோ கூட்டம். டாக்ஸிகாரருக்கு மீட்டர் பார்த்து ரூபாய் செட்டில் பண்ணிட்டு (சந்தோசமாய், நம்ம ஊரு மாதிரி இல்லல) ஸ்டேஷன் வாசலில் இருக்குற டிக்கெட் கவுண்டர்ல கோரேகான்கு 2 டிக்கெட் வாங்கியாச்சு. ஆனா அந்த ஊர்ல நம்ம சென்னைல இருக்குற மாதிரி ட்ரைன் ரூட் இல்ல. அங்க இரண்டு மூன்று வழிகளில் போற லோக்கல் ட்ரைன்கள் இருக்கு

அதனால அங்குள்ள ஒரு போலீஸ் கிட்ட போய் வழி கேட்டோம். ஆன அவரு உடனே ரவிய செக் பண்ணி என்னையும் செக் பன்னாரு. ரவி ஒரு கேமரா மொபைல் வச்சி இருந்தான் அதனல அதைவாங்கி ஒரு 30 நிமஷம் நோண்டி பார்த்தாரு. அதுக்குள்ள ஏன்டா இவர்ட வந்து வழிகேட்டோம்னு ஆகிருச்சு. நல்ல வேலை ரவிக்கு கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்சதால் எதோ சொல்லி சமளிச்சுட்டான். இல்ல நம்ம நிலைமை. நம்ம பேசுற இங்கிலிஷ்க்கு உள்ள பிடிச்சி போட்டாலும் போட்டுருப்பாங்க. ஒரு வழியா அவரு ட்ரைன் ஏற வேண்டிய இடத்த சொன்னாரு. ரவியும் நானும் அந்த ரெங்கநாதன் தெரு (அவ்ளோ கூட்டம் உள்ள ரயில்வே ஸ்டேஷன்) 
கூட்டத்துல மெதுவா பெட்டி பேக் எல்லாம் தூக்கிட்டு போனோம். நாங்க ட்ரைன் ஏற வேண்டிய நடைமேடை கடைசில இருந்துச்சு. அங்கபோய் நின்னா அவ்ளோகூட்டம் என்கூட ட்ரைன் ஏற. ஒருவழியா ட்ரைன் வந்ததும் அடிச்சு பிடிச்சு ஏறியாச்சு. ஒவ்வொரு ஸ்டேஷன்லும் 1000 பேர் இறங்கின 1500 பேர் ஏறாங்க. 

ஒருவழியா நாங்க வந்து இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. ஆனா அந்த ட்ரைன்ல இருந்து எங்கள இறங்கவிடல அவ்ளோ கூட்டம் அந்த ஸ்டேஷன்ல ஏறிச்சு. என்ன பண்ண அடுத்த ஸ்டேஷன்ல போய்தான் இறக்கி விட்டாங்க அவ்ளோ பாசம். இப்பதான் புரியுது எதுக்கு லோக்கல் ட்ரைன் டிக்கெட் எடுத்தா நம்ம சொன்ன ஸ்டேஷன்கு அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் டிக்கெட் தராங்கனு. ஒருவழியா இறங்கி அந்த ஸ்டேஷன்ல இருந்து எப்டி வரணும்னு விஜய் அண்ணனுக்கு போன் போட்டு கேட்டுட்டு ஒரு டாக்ஸி பிடிக்க போனோம். ஆனா அங்க ஒரு டாக்ஸி கூட காணோம்.
ஆட்டோ தான் ரெம்ப இருந்துச்சு சரினு ஆட்டோ பிடிச்சோம். அவரும் மீட்டர் போட்டுதான் ஆட்டோவ ஓட்டினார். ஒரு வழியா விஜய் சொன்ன இடத்துக்கு போய் நின்னோம். அவரு அங்க வந்து கூட்டிட்டு போரேனு சொல்லி இருந்தாரு............ 



பயணம் தொடரும்............ 


திங்கள், 20 அக்டோபர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 4


என்னடா இவன் அதிசயம்னு சொல்லுறான் நம்ம பாக்காத அதிசியமானு நினைக்காதிங்க.
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டு ஆட்டோகளில் மட்டும் போய் இருந்தா நான் பார்த்தத நீங்க கூட ஆ--னுதான் பார்பிங்க. நாங்க (ரவியும் நானும்) 2 பேரும் taxi ல ஏறி உட்காந்ததும் taxi டிரைவர் அவருக்கு இடது பக்கம் கைய வெளிய விட்டு மீட்டர் போட்டாரு பாருங்க அந்த மாதிரி நிகழ்ச்சி இதுவரைக்கும் நான் சென்னைல எந்த ஆட்டோவிலும் பார்த்தது இல்ல. டாக்ஸி அப்படியே Dadar நகர் உள்ள 20 கிமீ வேகத்துல போச்சு. டாக்ஸி ஜன்னல் வழியா வெளியே (பட்டிகாட்டான் மீட்டாய் கடைய பார்த்த மாதிரி) பாத்துக்கிட்டே வந்தேன். வழி முழுவதும் பழைய காலத்து கட்டடங்கள் புது கட்டடங்கள் சேர்ந்து சேர்ந்து இருந்தன. ரவியும் எனக்கு புரியாத ஹிந்தி-ல டாக்ஸி டிரைவர்- ட எதோ சொல்லிடே வந்தான். 

 ஒருவழியா ஒரு அப்பார்ட்மென்ட்-ல வாசல போய் நின்னுச்சு. வாசல இறங்குனதும் ரவி வேகமாக பர்ஸ எடுத்து மீட்டர் பார்த்துட்டு அதவிட 1 ரூபாய் கம்மியா கொடுத்தான். நம்ம ஊரு சினிமால சார் மீட்டருக்கு மேல 2 ரூபாய் போட்டுத்தாங்க- னு டயலாக் ( சினிமால மட்டும் ) கேட்டுருகோம். இதல்லாம் பாக்க இந்த ஊரு டாக்ஸி டிரைவர் ரெம்ப நல்லவன்கய- னு நினைச்சுகிட்டேன். 
7 பேரு நிக்க மட்டும் முடியுற லிப்ட்ல 3 வது மாடிக்கு கூட்டிட்டு போனான். அந்த மாடில 2 வீட்டு வாசல் இருந்துச்சு. அதுல இடப்பக்கம் உள்ள வீட்டுக்கு கதவ திறந்து உள்ள போனோம். ஹால்-அ என் பெட்டி பேக் எல்லாம் வச்சிட்டு சோபா உக்காந்தோம். ரவி அண்ணன் உள் ரூம்-ல துங்கிட்டு இருந்தாரு. நாங்க அப்டியே ஸ்கூல் பிரண்ட்ஸ் பத்தி பேசிட்டு இருந்தோம். மணி இப்டியே 6 ஆகிருச்சு. ரவி சொன்னான் வாட போய் டீ குடிச்சுட்டு வரலாம்னு சொன்னான். சரின்னு 2 பேரும் பல்ல வெலக்கி மூஞ்ச கழுவிட்டு டீ குடிக்க போனோம். ஒரு சின்ன ஹோட்டல் ஓரளவு நல்ல நீட்டா இருந்துச்சு வெளியவே டேபிள் எல்லாம் போட்டுருந்தாங்க. அதுல உட்கந்தோம். ஒருத்தன் கைல 2 டம்ளரில் தண்ணி கொண்டு வந்து வச்சான் . ஹிந்தில அவன் என்ன பார்த்து கியா சையே னு(என்ன வேணும்) கேட்டான். அப்ப அவன் என்ன கேட்டனு ஒனும் தெரியல. நான் அப்டியே முழிச்சு ரவிய பார்த்தேன். அவன் உடனே 2 கட்டிங்னு சொன்னான்.

எனக்கு தூக்கி வாரி போட்டது என்னடா சொல்லுற !!! (நம்ம ஊர்ல கட்டிங்னா சரக்கு ஆன இங்க டீ னு அர்த்தம்) அவன் உடனே நான் ஆச்சிரியம் படுறத பார்த்து நான் என்ன நினைக்குறேனு புரிஞ்சு டேய் இந்த ஊர்ல டீ தான் அப்டி 
சொல்லுவங்கனு சொன்னான். நான் லேசா சிரிச்சுகிட்டேன் இந்த ஊர்ல இன்னும் இந்த மாதிரி இனி என்ன என்ன வார்த்தை இருக்குமோனு. கொஞ்ச நேரத்துல டீ வந்துச்சு எதோ நம்ம ஊரு டீ மாறி இல்லனாலும் அந்த காலை நேரத்துக்கு நல்லாதான் இருந்துச்சு. பெறகு 2 பேரும் அவன் வீட்டுக்கு போனோம். அங்க அவனின் அண்ணன் எழுந்து பேப்பர் படிச்சுட்டு இருந்தாரு. அவரும் எனக்கு முன்பே தெரியும் என்பதால் அவர்ட நலம் விசாரிச்சுட்டு டிவிய பார்த்துகிட்டே இருந்தேன். 7 மணி போல வீட்டுக்கு போன் பண்ணி வந்து சேர்ந்துடேனு சொல்லிட்டு. குளிச்சு ரெடி ஆனேன். ரவியும் குளிச்சு ரெடி ஆனான். 

நான் ஹால்ல உக்காந்து டிவி பார்த்துட்டு இருந்தேன் ரவி உள் ரூம்ல தல வாரிக்கிட்டு இருந்தான். யரோ ஒருத்தர் கதவ தட்டுற சத்தம் கேட்டு ரவி கூப்பிடுகிட்டே கதவ திறந்தேன். என் வயசுல ஒரு பையன் ஹிந்தி-ல ரவி பேரசொல்லி என்னமோ கேட்டான். அதுக்குள்ள ரவி வந்துடான் நல்ல வேலை. நான் தப்பித்தேன். அவன் என்னமோ ஹிந்தி ரவிட்ட சொல்லிடு போய்ட்டான். பெறகு 2 பேரும் கீழ அந்த ஹோட்டல் போய் தோசை சாப்பிட்டு வந்தோம். நல்ல வேலை அவன் இருந்ததால் அவனே எல்லா இடத்துலும் பேசிட்டான். திரும்ப விஜய் அண்ணனுக்கு போன் போட்டு அட்ரஸ் வாங்கிட்டு ரவியே என்னை அங்க கொண்டுவந்து விட்டுருவனு சொல்லிட்டு. ரவி அண்ணன் கிட்ட போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு பெட்டி பேக்-அ எடுத்துகிட்டு மீண்டும் dadar ஸ்டேஷன்கு போறதுக்கு டாக்ஸி பிடிச்சோம். ( அந்த ஸ்டேஷன்-ல லோக்கல் ட்ரைன் ஏறி கோரேகான் என்ற இடத்துக்கு போகணும்) .ரவிக்கும் இதுதான் முதல் தடவை அந்த ஏரியாக்கு போறது.       

பயணம் இன்னும் தொடரும்..... 

திங்கள், 13 அக்டோபர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 3

முந்தின பதிப்பு இங்க (தமிழ் to ஹிந்தி பாகம் - 2)


என்னடா இவன் ரெம்ப பயந்தவனா இருக்கான்னு நெனைக்க வேண்டாம். எல்லோருக்கும் முதல் தடவை புது உலகத்துக்கு போகும் பொது இருக்குறதுதான்.

அந்த பயத்தோட மொபைல் உள்ள ஒரு ஒரு நம்பரா பார்த்துட்டு இருந்தேன். அப்பதான் நாபகம் வந்துச்சு என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஒருவன் மும்பையில் வேலை பாக்குறேன்னு சொன்னது. ஆனா அவன் நம்பர் என்ட இல்ல. அதனால என்கூட பள்ளியில படிச்ச பிரண்சுக்கு போன் போட்டு எப்டியோ நம்பர் வாங்கி அவனுக்கு கால் பண்ணேன். நான் முன்ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் அவன் நான் இறங்க வேண்டிய DADAR லதான் தங்கி இருகேன்னு சொன்னான். அவன்ட நடந்தது , நடக்குறது, நடக்கபோவது எல்லாம் சொல்லி வண்டி பெட்டி நம்பர் சொல்லி 4 மணிக்கு ஸ்டேஷன் வர சொல்லிடு கால கட் பண்ணிட்டு யப்பாடினு உட்கார்ந்தேன்.


மொபைல்ல காலை 2:30   அலாரம் வச்சிட்டு படுத்து துங்க ஆரம்பிச்சேன். 2 மணிக்கு நான் எந்துருச்சு அலாரத்த எழுப்பி அமத்திட்டு ஜன்னல பார்த்துடே இருந்தேன். திடிர்னு ட்ரைன் குகை குள்ள எல்லாம் போய்ட்டு இருந்தது. இருட்டா இருந்ததால சரியா தெரியல. லேசா குளுரவும் செஞ்சது. மனசுல லேசா சந்தோசமா வேற இருந்துச்சு. B.E முடிச்சபோ நம்மக்கு Rs3000 சம்பளத்துல சாப்ட்வேர்ல வேலை கிடைக்குமானு இருந்த என்னக்கு Rs10000 ல Offer.  சந்தோசம் இருக்கத்தான செய்யும். அப்டியே சென்னைல வேலை தேடி கம்பெனி கம்பெனியா interview அட்டென்ட் பண்ணது. மொபைல் சிம் கார்டு விக்க வேலை கிடைச்சதும் , அதுக்கு சந்தோஷ பட்டது, அத எங்க அண்ணன்ட சொல்லி திட்டு வாங்குனது. பணம் கட்ட சொல்லி ஒருத்தன் வேலதரனு சொன்னது நெனச்சி நானே சிரிச்சுகிட்டேன் நம்மக்கும் லைப் செட் ஆகபோதுனு சந்தோசத்துல.  

மும்பை ஸ்டார்ட் ஆக பெட்டி பேக் எல்லாம் எடுத்து வச்சி வாசல்ல வந்து ரவிக்கு (அதாங்க ஸ்கூல் நண்பன்) போன் போட்டேன் அவனும் ஸ்டேஷன் வந்துட்டேனு சொன்னான். என்னைய அறியாம வாய்ல சின்ன சிரிப்பு.  
Dadar ஸ்டேஷனும் வந்துருச்சு. அவனும் கரெக்ட்டா என் கோச் நேரா வந்து நின்னான். ரெம்ப நாள் கழிச்சு பார்த்த சந்தோசத்துல என்னடா மச்சான் எப்டி இருக்குறனு நலம் விசாரிச்சுட்டு இருந்தேன். திடிர்னு யரோ காது பக்கத்துல என்னமோ கத்தி 
பெட்டில கைய வச்சி இழுத்த மாதிரி இருந்துச்சு திரும்புனா சிகப்பு சட்டைல பெட்டி தூக்குரவரு யம்மாடி பயந்த மாதிரியே வந்துடங்கய ( அந்த ஊர்லயும் அதே சிகப்பு சட்டை) நல்ல வேல ரவிக்கு ஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சுருந்தது. என்னமோ சொன்னான்.  அதுக்கு அவரு எதோ சொல்லிட்டு போய்ட்டாரு. அப்டியே மெதுவ நடந்தோம் அவன் வீட்ட பத்தி நான் விசாரிக்க பதிலுக்கு அவன் விசாரிக்க ஸ்டேஷன் வாசல பார்த்து. காலை 4 மணி போலவே இல்ல அவ்ளோ 
கூட்டம் அந்த ஸ்டேஷன் . நான் அவன்ட கேட்டேன் என்னடா இவ்ளோ கூட்டம்னு அதுக்கு அவன் சொன்னான் இதுஎன்ன மச்சி கூட்டம் காலையில 8 மணிக்கு இருக்கும் பாரு கூட்டம் அதுக்கு பேர்தான் கூட்டம்னு சொன்னான்.
அப்டியே dadar வாசல்ல வந்து நின்னோம். அந்த நேரத்துக்கு அத்தன taxi அங்க நின்னுச்சு. அதுல ஒன்னுல எதோ இடத்து பேர சொல்லி கேட்டான் அப்புறம் வண்டில ஏறி உட்கந்தோம்  அப்பதான் அங்க நான் இதுவரைக்கும் பாக்காத ஒரு அதிசயம் நடந்தது!!!!!!!     



தொடரும்..................... 


வியாழன், 25 செப்டம்பர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 2

முதல் பதிப்பு இங்க (தமிழ் to ஹிந்தி பாகம் - 1) 




இந்தியாவிலே பிறந்து வளர்ந்து அலுவல் மொழி இதுதான் ஹிந்தியானு கேட்ட தமிழர்களில் நானும் ஒருவன். மதியம் தூங்கி மாலை எழுந்த போது மணி 6 இருக்கும். அப்படியே சன்னல் பக்கதுல உட்காந்து மரம் நகர்வதை பார்த்துடே இருந்தேன். அப்ப ஒருத்தர் சிகப்பு கலர் சட்டை போட்டுட்டு கைல பேப்பர் பேனா வச்சி எல்லோர்டையும் எதோ கேட்டு எழுதிகிட்டு இருந்தாரு. எல்லோரும் ஒன் பிரியாணி , ஒன் பிரைடு ரைஸ்னு சொல்லிடு இருந்தாக. நம்ம தமிழன் ஆச்சே புத்தி கொஞ்சம் அதிகம்ல. அவரு கேன்டீன் ஆளுன்னும் ஆர்டர் எடுக்க வந்துருகாருனும் கண்டு பிடிச்சுடோம்ள. நானும் எனக்கு ஒன் ப்ளட் வெஜ் பிரியாணினு ஆர்டர் குடுத்துடு மீண்டும் மரம் நகர்வதை பார்க்க போயாச்சு.



இரவு 8 மணி போல ஒரு வெஜ் பிரியாணினு என் சீட்ல நம்பர் பார்த்து வச்சிட்டு போனார். வயறு பசிக்கு சாப்பிட்டு  கொண்டுபோன குமுதம்ம எடுத்துட்டு உட்கார்ந்தேன்,  ஒருத்தர் (ஆர்டர் எடுத்த ஆளு) வந்தாரு. நான் அப்ப என் சீட்டுல (Side lower)  நான் மட்டும் இருந்தேன் . என்ட எதோ சொன்னாரு (ஹிந்தில) எனக்கு ஒன்னும் புரியல அப்படியே திரு திரு முழிச்சேன். அத பார்த்த அவன் Ninetysixனு சொன்னான். தூக்கிவாரி போட்டுச்சு என்னடா இது அஞ்சபர்ல பிரியாணி சாப்பிட்டாலே 70 ரூவா தாண்டாது. எதோ மண்ணுல எண்ணைய ஊத்துன மாதிரி கொடுத்துட்டு 96  ரூவாயா தப்பா கேக்குறான்னு நெனச்சு why?னு கேட்டேன்.


அதுக்கு போய் அவன் பேசுனான் பாரு கட கடனு ஒன்னுமே புரியல ( இதுக்கு அவன் கேட்ட 96  ரூவாய கொடுத்துட்டு பேசாம இருந்துருக்கலாமோ)  திரு திரு முழிச்சேன். நல்ல வேலை கடவுள் ( ஹிந்தியும் தமிழும் தெரிஞ்சவர்) மாதிரி ஒருத்தர் வந்தார் என்ன தம்பி என்னனு கேட்டாரு உயிரே வந்தமாறி அண்ணா ஒரு பிரியாணி சாப்டதுக்கு போய் 96  ரூவா கேட்குறாரு என்னனு கேளுங்க சொன்னேன். இவரு அவர்ட வடநாட்டு ஆவி புகுந்த மாதிரி என்னவோ கேட்டாரு அப்புறம் இவர் என்ட தம்பி மதியம் சாப்டதுக்கு சேர்த்து 96  ரூவானு சொன்னாரு . இது என்ன புது கொடுமை நான் மதியம் இவர்ட வாங்கி சாப்பிடல நான் கொண்டு வந்துருந்தேன் அததான் சாப்பிட்டேன்னு சொன்னேன்.


பிறகு கடவுள் அண்ணாச்சி ஏதோ பேசி 30 ரூபா மட்டும் கொடுக்க சொன்னாரு. (கேன்டீன் ஆளு சீட் நம்பர் மாத்தி கேட்டாரு போல) . எப்படியோ பிரச்சனை முடிஞ்சது. எல்லோரும் அந்த பக்கம் போனதுக்கப்புறம் (மனசுல: ஐயோ இன்னும் ரயில் விட்டு இறங்கல அதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா)  வேகமா மொபைல்ல எடுத்து விஜய்க்கு (அதாங்க எனக்கு மும்பைல வேலை வாங்கி தந்தவரு) போன் போட்டு அண்ணா ஸ்டேஷன்க்கு கூப்பிட வந்துருங்க எனக்கு ஹிந்தி ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவரு ஒரு குண்டு தூக்கி போட்டாரு " தம்பி வண்டி அதிகாலை 4  மணிக்கு வந்துரும் அந்த டைம்க்கு லோக்கல் ரயில் இல்ல அதனால 6 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல வெயிட்பன்னு" னு சொன்னாரு. ஐயோ நம்ம ஊரு ஸ்டேஷன்ல ரெண்டு பெட்டியோட இறங்குனா போர்டர் வந்து பெட்டிய பிடுங்குவாங்க நம்ம ஊர்லயாவது வேண்டாம்னு சொல்லி தப்பிக்கலாம். ஆனா இங்க வேண்டாம்ங்ரத ஹிந்தில சொல்லணும் அதுதான் நம்மக்கு தெரியாதே. (மனசுல மீண்டும் ஹிந்தி பயத்தோட) பயணம் தொடரும்......... 

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 1

தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் மொழி வழியாக 1 முதல் 12 வரை படித்து முடித்து B.E யை ஆங்கில மொழி வழியாக இ(க)ஷ்டப்பட்டு முடித்தேன். நான் மட்டும் என்ன விதி விலக்கா . எல்லோரையும் போல வேலை தேடி சென்னை வந்தேன். சென்னையில் ஒருவருடம் ஒரு சிறு கம்பனியில் வேலை பார்த்தேன். பிறகு ஒரு நல்ல நண்பர் மூலம் மும்பையில் வேலை கிடைத்த செய்தி வந்த பிறகு .......

ஊருக்கு போய் எல்லோர்ட்டையும் சொல்லிட்டு அத இத சொல்லி வீட்டுல காச வாங்கிட்டு மீண்டும் சென்னை வந்தேன். நண்பர்கள் வலம்சூழ சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 6:30 வந்து சேர்ந்தேன் 7 மணி வண்டிய பிடிக்க . உடன் வந்த நண்பன் ஒருவன் மாப்ள "learn hindi in 30 days" புக் வாங்கிட்டு வரவான்னு கேட்டான் அப்பதான் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. அதுதான் முதல் தடவை தமிழ்நாட்டை விட்டு வெளிய போகபோறன். ஹிந்தில ஹிந்தினு ஒரு வார்த்தை தவிர வேறு வார்த்தை தெரியாது. அதுக்குள்ள train வந்துருச்சு. ஓடி போய் வண்டிய பிடிச்சு ஏறி கூட வந்தவர்களுக்கு bye சொல்லி ஊர் காசு கொடுத்து சீட்டை தேடி உட்கார்ந்தேன்.

ஆனா நினைப்பு எல்லாம் அந்த புக் மேலயும் எப்டிடா அங்க சமாளிக்கனு ஏதோ ஏதோ மனசுல ஓடிடு இருந்துச்சு. ஒரு பக்கம் வேலைகிடைச்சுறுச்சுனு சந்தோசம் ஆனா Hindi நினைச்சு பயம் வேறு. அப்படியே துங்கிடேன். சல சலனு பேச்சு சத்தம். கண்ண முழிச்சு பார்த்தேன் மணி மதியம் ஆகிருச்சு. வண்டி ஆந்திரா வந்துருச்சுனு பக்கத்துல இருந்தவர்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். கடப்பானு ஒரு ஸ்டேஷன்ல வண்டி நின்னுச்சு. கொஞ்ச பேரு தெலுங்குல பேசுராங்க. கொஞ்சம் தமிழ் சத்தமும் கேட்டுகிட்டே இருந்துச்சு. மதியம் சாப்பாடு கொண்டு போயிருந்தால யார்டயும் ஒனும் பேசாம சாப்ட்டுட்டு இருந்தேன். திடிருன்னு ஒருத்தர் புரியாத மொழில சத்தம் போட்டு பேசிட்டு இருந்தாரு . ஓ இதுதான் ஹிந்தியா ....

தொடரும்.......
Blog Widget by LinkWithin