வியாழன், 25 செப்டம்பர், 2008

தமிழ் to ஹிந்தி பாகம் - 2

முதல் பதிப்பு இங்க (தமிழ் to ஹிந்தி பாகம் - 1) 
இந்தியாவிலே பிறந்து வளர்ந்து அலுவல் மொழி இதுதான் ஹிந்தியானு கேட்ட தமிழர்களில் நானும் ஒருவன். மதியம் தூங்கி மாலை எழுந்த போது மணி 6 இருக்கும். அப்படியே சன்னல் பக்கதுல உட்காந்து மரம் நகர்வதை பார்த்துடே இருந்தேன். அப்ப ஒருத்தர் சிகப்பு கலர் சட்டை போட்டுட்டு கைல பேப்பர் பேனா வச்சி எல்லோர்டையும் எதோ கேட்டு எழுதிகிட்டு இருந்தாரு. எல்லோரும் ஒன் பிரியாணி , ஒன் பிரைடு ரைஸ்னு சொல்லிடு இருந்தாக. நம்ம தமிழன் ஆச்சே புத்தி கொஞ்சம் அதிகம்ல. அவரு கேன்டீன் ஆளுன்னும் ஆர்டர் எடுக்க வந்துருகாருனும் கண்டு பிடிச்சுடோம்ள. நானும் எனக்கு ஒன் ப்ளட் வெஜ் பிரியாணினு ஆர்டர் குடுத்துடு மீண்டும் மரம் நகர்வதை பார்க்க போயாச்சு.இரவு 8 மணி போல ஒரு வெஜ் பிரியாணினு என் சீட்ல நம்பர் பார்த்து வச்சிட்டு போனார். வயறு பசிக்கு சாப்பிட்டு  கொண்டுபோன குமுதம்ம எடுத்துட்டு உட்கார்ந்தேன்,  ஒருத்தர் (ஆர்டர் எடுத்த ஆளு) வந்தாரு. நான் அப்ப என் சீட்டுல (Side lower)  நான் மட்டும் இருந்தேன் . என்ட எதோ சொன்னாரு (ஹிந்தில) எனக்கு ஒன்னும் புரியல அப்படியே திரு திரு முழிச்சேன். அத பார்த்த அவன் Ninetysixனு சொன்னான். தூக்கிவாரி போட்டுச்சு என்னடா இது அஞ்சபர்ல பிரியாணி சாப்பிட்டாலே 70 ரூவா தாண்டாது. எதோ மண்ணுல எண்ணைய ஊத்துன மாதிரி கொடுத்துட்டு 96  ரூவாயா தப்பா கேக்குறான்னு நெனச்சு why?னு கேட்டேன்.


அதுக்கு போய் அவன் பேசுனான் பாரு கட கடனு ஒன்னுமே புரியல ( இதுக்கு அவன் கேட்ட 96  ரூவாய கொடுத்துட்டு பேசாம இருந்துருக்கலாமோ)  திரு திரு முழிச்சேன். நல்ல வேலை கடவுள் ( ஹிந்தியும் தமிழும் தெரிஞ்சவர்) மாதிரி ஒருத்தர் வந்தார் என்ன தம்பி என்னனு கேட்டாரு உயிரே வந்தமாறி அண்ணா ஒரு பிரியாணி சாப்டதுக்கு போய் 96  ரூவா கேட்குறாரு என்னனு கேளுங்க சொன்னேன். இவரு அவர்ட வடநாட்டு ஆவி புகுந்த மாதிரி என்னவோ கேட்டாரு அப்புறம் இவர் என்ட தம்பி மதியம் சாப்டதுக்கு சேர்த்து 96  ரூவானு சொன்னாரு . இது என்ன புது கொடுமை நான் மதியம் இவர்ட வாங்கி சாப்பிடல நான் கொண்டு வந்துருந்தேன் அததான் சாப்பிட்டேன்னு சொன்னேன்.


பிறகு கடவுள் அண்ணாச்சி ஏதோ பேசி 30 ரூபா மட்டும் கொடுக்க சொன்னாரு. (கேன்டீன் ஆளு சீட் நம்பர் மாத்தி கேட்டாரு போல) . எப்படியோ பிரச்சனை முடிஞ்சது. எல்லோரும் அந்த பக்கம் போனதுக்கப்புறம் (மனசுல: ஐயோ இன்னும் ரயில் விட்டு இறங்கல அதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா)  வேகமா மொபைல்ல எடுத்து விஜய்க்கு (அதாங்க எனக்கு மும்பைல வேலை வாங்கி தந்தவரு) போன் போட்டு அண்ணா ஸ்டேஷன்க்கு கூப்பிட வந்துருங்க எனக்கு ஹிந்தி ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவரு ஒரு குண்டு தூக்கி போட்டாரு " தம்பி வண்டி அதிகாலை 4  மணிக்கு வந்துரும் அந்த டைம்க்கு லோக்கல் ரயில் இல்ல அதனால 6 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல வெயிட்பன்னு" னு சொன்னாரு. ஐயோ நம்ம ஊரு ஸ்டேஷன்ல ரெண்டு பெட்டியோட இறங்குனா போர்டர் வந்து பெட்டிய பிடுங்குவாங்க நம்ம ஊர்லயாவது வேண்டாம்னு சொல்லி தப்பிக்கலாம். ஆனா இங்க வேண்டாம்ங்ரத ஹிந்தில சொல்லணும் அதுதான் நம்மக்கு தெரியாதே. (மனசுல மீண்டும் ஹிந்தி பயத்தோட) பயணம் தொடரும்......... 

கருத்துகள் இல்லை:

Blog Widget by LinkWithin