திங்கள், 8 செப்டம்பர், 2008

எந்திரன்- The Robot

Enthiran பற்றி மற்ற இணையத்தளத்தில் இருந்து நான் சேகரித்த தகவல்கள் .


ரஜினியின் எந்திரன்- தி ரோபோ படத்தின் முதல் டிசைன் அதிகாரப்பூர்வமாக இ வெளியிடப்பட்டுள்ளது.


மீசையில்லாத 'ரோபோ' ரஜினி கையில் ஒற்றை ரோஜாவுடன் இருப்பது போன்ற வித்தியாசமான டிசைன் இது.


படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேஷன் டிசைனை மட்டுமே இப்போதைக்கு ஷங்கர் வெளியிட்டுள்ளாராம்.


அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.


ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கேட்டுக் கொண்டாராம்.


சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ நாவ்லகளின் அடிப்படையில்தான் இந்தப் படம் உருவாகிறது. ஆனால் இந்த நாவல்களில் ஹாலிவுட் பாணியில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளார் ஷங்கர், சுஜாதா இறப்பதற்கு முன்பே, அவரது அனுமதியுடன்.


கதைப்படி இந்தப் படத்தில் ரஜினிக்கு இரு கெட் அப்கள். ஒன்று மனித ரஜினி, இன்னொன்று ரோபோ. ஐஸ்வர்யாவின் பாத்திரத்துக்கு நிலா என்று பெயர். இந்த இருவரைத் தவிர இன்னும் ஒரு முக்கியமான பாத்திரமும் இந்தப் படத்தில் உண்டு. அதுதான் ஜீனோ. குட்டி எந்திர நாய்க்குட்டி. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் எல்லாருக்கும் பிடிக்கும் சாகஸங்களைச் செய்யும், சொந்தமாக சிந்திக்கும் திறன் கொண்ட நாய்க்குட்டி இது.


ஜூராஸிக் பார்க் படத்துக்கு டைனோசர்களை வடிவமைத்தவர்கள் தான் ரோபோ ரஜினி மற்றும் ஜீனோவை டிசைன் பண்ணுகிறார்கள். அமெரிக்காவில் ரஜினி-ஐஸ்வர்யாவின் டூயட் பாடலுடன் படப்பிடிப்பு துவங்குகிறதுCast - Rajinikanth, Aishwarya Rai Bachchan, Chakravarthy

Director – Shankar

Producer - Karunamoorthy, C Arun Pandiyan [Ayngaran International], Kishore Lulla [Eros Inernational]

Screenplay - Shankar, Sujatha, Balakumaran

Cinematographer – Rathnavelu

Art Director - Sabu Cyril

Editor – Antony

Animatronics - Stan Winston Studio (USA) [Predator, Jurassic Park, Pearl Harbor, Iron man, Terminator, I-Robot]

VFX - From Hollywood (ILM, Tippet, Cafe EFX), From Hong Kong (Centro, Menfond)

Costume Designer - Manish Malhotra, Mary E Vogt [Men in Black, Batman returns, Inspector Gadget]

Action - Yuen Woo Ping [Crouching Tiger Hidden Dragon, Matrix, Kill Bill]

Lyrics - Vairamuthu, Pa Vijay

Choreographer - Raju Sundaram


எடுக்கபட்ட இணையத்தள முகவரிகள் :
http://tamilgallery.oneindia.in/v/Tamil-heroes-gallery/Rajinikanth/
http://www.arr4music.com/details.html#robot

கருத்துகள் இல்லை:

Blog Widget by LinkWithin