டாக்ஸி அப்டியே மும்பை நகரின் dadar தெருகளில் ஊர்ந்து போய்கிட்டு இருந்தது. சாலைகளில் சிவப்பு நிற பஸ் கருப்பு நிற டாக்ஸிகளும் தான் போயிட்டு இருந்துச்சு.
நம்ம சென்னைல எவ்ளோ டூவீலர் ஓடுமோ அவ்ளோ கார்கள் தான் ரோட்ல போயிடு இருந்துச்சு. டூவீலர் எண்ணிக்கை மிக குறைவு. அப்போது அங்க ஒரு ஆட்டோ கூட பாக்கமுடியல. நாங்க ஏறின டாக்ஸி dadar ஸ்டேஷன் போய்நின்னுசு. ரவி சொன்ன மாதிரியே அந்த ஸ்டேஷன் அவ்ளோ கூட்டம். டாக்ஸிகாரருக்கு மீட்டர் பார்த்து ரூபாய் செட்டில் பண்ணிட்டு (சந்தோசமாய், நம்ம ஊரு மாதிரி இல்லல) ஸ்டேஷன் வாசலில் இருக்குற டிக்கெட் கவுண்டர்ல கோரேகான்கு 2 டிக்கெட் வாங்கியாச்சு. ஆனா அந்த ஊர்ல நம்ம சென்னைல இருக்குற மாதிரி ட்ரைன் ரூட் இல்ல. அங்க இரண்டு மூன்று வழிகளில் போற லோக்கல் ட்ரைன்கள் இருக்கு

அதனால அங்குள்ள ஒரு போலீஸ் கிட்ட போய் வழி கேட்டோம்.
ஆன அவரு உடனே ரவிய செக் பண்ணி என்னையும் செக் பன்னாரு. ரவி ஒரு கேமரா மொபைல் வச்சி இருந்தான் அதனல அதைவாங்கி ஒரு 30 நிமஷம் நோண்டி பார்த்தாரு. அதுக்குள்ள ஏன்டா இவர்ட வந்து வழிகேட்டோம்னு ஆகிருச்சு. நல்ல வேலை ரவிக்கு கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்சதால் எதோ சொல்லி சமளிச்சுட்டான். இல்ல நம்ம நிலைமை. நம்ம பேசுற இங்கிலிஷ்க்கு உள்ள பிடிச்சி போட்டாலும் போட்டுருப்பாங்க. ஒரு வழியா அவரு ட்ரைன் ஏற வேண்டிய இடத்த சொன்னாரு. ரவியும் நானும் அந்த ரெங்கநாதன் தெரு (அவ்ளோ கூட்டம் உள்ள ரயில்வே ஸ்டேஷன்)



ஒருவழியா நாங்க வந்து இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு.
ஆனா அந்த ட்ரைன்ல இருந்து எங்கள இறங்கவிடல அவ்ளோ கூட்டம் அந்த ஸ்டேஷன்ல ஏறிச்சு. என்ன பண்ண அடுத்த ஸ்டேஷன்ல போய்தான் இறக்கி விட்டாங்க அவ்ளோ பாசம்.
இப்பதான் புரியுது எதுக்கு லோக்கல் ட்ரைன் டிக்கெட் எடுத்தா நம்ம சொன்ன ஸ்டேஷன்கு அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் டிக்கெட் தராங்கனு. ஒருவழியா இறங்கி அந்த ஸ்டேஷன்ல இருந்து எப்டி வரணும்னு விஜய் அண்ணனுக்கு போன் போட்டு கேட்டுட்டு ஒரு டாக்ஸி பிடிக்க போனோம். ஆனா அங்க ஒரு டாக்ஸி கூட காணோம். 
ஆட்டோ தான் ரெம்ப இருந்துச்சு சரினு ஆட்டோ பிடிச்சோம். அவரும் மீட்டர் போட்டுதான் ஆட்டோவ ஓட்டினார். ஒரு வழியா விஜய் சொன்ன இடத்துக்கு போய் நின்னோம். அவரு அங்க வந்து கூட்டிட்டு போரேனு சொல்லி இருந்தாரு............



ஆட்டோ தான் ரெம்ப இருந்துச்சு சரினு ஆட்டோ பிடிச்சோம். அவரும் மீட்டர் போட்டுதான் ஆட்டோவ ஓட்டினார். ஒரு வழியா விஜய் சொன்ன இடத்துக்கு போய் நின்னோம். அவரு அங்க வந்து கூட்டிட்டு போரேனு சொல்லி இருந்தாரு............
பயணம் தொடரும்............
1 கருத்து:
unga tamil to hindi nalla irukuthu....naanum kitta thatta unga mathiri thaan... but neenga mumbai ...naan orissa-chattisgarh bordet....write more....regards alagu narayanan
கருத்துரையிடுக